வெளியிடப்பட்ட நேரம்: 14:53 (18/04/2017)

கடைசி தொடர்பு:15:26 (18/04/2017)

அமைச்சர்களுக்கு எதிராக பகீர் புகாரைக் கிளப்பும் சசிகலா அணி எம்எல்ஏ!

டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளரும் அ.தி.மு.க. அம்மா அணியின் எம்எல்ஏ-வுமான வெற்றிவேல், சற்றுமுன் பேட்டி அளித்துள்ளார். டி.டி.வி.தினகரனின் உத்தரவு இல்லாமல் அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

vettrivel

அவர் அளித்துள்ள பேட்டியில், 'பதவிக்காக யார் யார் எவரெவர் கால்களில் விழுந்தார்கள் என்பது எனக்குத் தெரியும். அதை மறந்துபோய் இருக்கிறார்கள். எதற்காகவும் நாங்கள் யாரிடமும் மண்டியிட மாட்டோம், அதற்கான அவசியமும் இல்லை. துணைப் பொதுச்செயலாளர் தினகரன் நேற்று ஊரில் இல்லாதபோது, அமைச்சர்களின் இப்படியொரு ஆலோசனைக் கூட்டம் நடந்திருக்கிறது. யாருடைய உத்தரவின் பேரில் இந்தக் கூட்டம் நடந்தது என்று தெரியவில்லை. எது எப்படி நடந்தாலும், சசிகலாதான் கழகப் பொதுச்செயலாளர். டி.டி.வி.தினகரன் தான்  துணைப் பொதுச்செயலாளர். இந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. அமைச்சர்கள் விவாதிக்க தனிக்குழு எதுவும் போடப்படவில்லை' என்று கூறினார்.

- ந.பா.சேதுராமன்