வெளியிடப்பட்ட நேரம்: 10:33 (19/04/2017)

கடைசி தொடர்பு:14:35 (19/04/2017)

டி.டி.வி.தினகரனின் நம்பிக்கைப் பேச்சு... முதல்வர் எடப்பாடியின் தனி ஆவர்த்தனம்!

'கட்சியில் எனக்கு எந்த எதிர்ப்புமே இல்லை. அனைத்து அ.தி.மு.க எம்எல்ஏ-க்களும் என்னுடன்தான் இருக்கின்றனர்' என டி.டி.வி.தினகரன் பேட்டியளித்துள்ளார். 

ttv.dinakaran

தமிழகத்தில் நிலவிவரும் பரபரப்பான அரசியல் சூழலில், அ.தி.மு.க-வைக் கைப்பற்றப்போவது யார் என்ற பெரும் போட்டி, கட்சிக்குள் உருவாகியுள்ளது. இந்த நிலையில், தனது அடையாறு வீட்டில் பேட்டி அளித்துள்ள டி.டி.வி.தினகரன், 'அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் எங்களுடன்தான் உள்ளனர். கட்சிக்குள் எனக்கு எந்த எதிர்ப்பும் இல்லை' எனக் கூறியுள்ளார். இன்று காலை அவருடன் கட்சியின் மூத்த நிர்வாகியும், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியுமான தளவாய் சுந்தரம் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். 

admk

இந்த நிலையில், இன்று மாலை 3 மணிக்கு எம்எல்ஏ-க்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார் தினகரன். இதுகுறித்துப் பேசியுள்ள அமைச்சர் ஜெயக்குமார், 'எம்எல்ஏ-க்கள் கூட்டத்தைக் கூட்ட எந்த அதிகாரமும் தினகரனுக்கு இல்லை. அ.தி.மு.க விதிப்படி தலைமை நிலைய செயலரே எம்எல்ஏ கூட்டத்தைக் கூட்ட முடியும்' என்றார். தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அவரது கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் அ.தி.மு.க அமைச்சர்கள் ஆலோசனை நடத்திவருகின்றனர். ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, பன்னீர்செல்வம் இல்லத்துக்கு மைத்ரேயன் எம்பி., முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன், செம்மலை, ராஜகண்ணப்பன், விஸ்வநாதன், மோகன், சண்முகநாதன், நிர்மலா பெரியசாமி ஆகியோர் வந்துள்ளனர்.