'பச்சைத்துரோகம்'- அர்விந்தர் சிங்கை விளாசும் ஷீலா தீட்சித்!

'காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அர்விந்தர் சிங், திடீரென பா.ஜ.க-வில் இணைந்திருப்பது பச்சைத்துரோகம்' என முன்னாள் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் கூறியுள்ளார்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில், ஷீலா தீட்சித் தலைமையிலான டெல்லி அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக வலம்வந்தவர், அர்விந்தர் சிங் லவ்லி. இவர், நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் பா.ஜ.க-வில் இணைந்தார். டெல்லியில் அமித் ஷா முன்னிலையில் அவர் பா.ஜ.க-வில் இணைந்தார். இதையடுத்து, அர்விந்தர் சிங்கின் செயலுக்கு காங்கிரஸ் தரப்பில் கண்டனங்கள் முன்வைக்கப்பட்டன.

இதனிடையே, டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் இந்த விவகாரம்குறித்து பேசுகையில்,' அர்விந்தர் சிங்கின் செயல் ஒரு பச்சைத்துரோகம். இது அரசியல் சந்தர்ப்பவாதத்தினால் எடுக்கப்பட்ட முடிவு' என விமர்சித்துள்ளார். மேலும், 'கட்சி கடினமான ஒரு காலகட்டத்தில் இருக்கும்போது, நம்பியவர்களே விலகிச் சென்றால், யாரை நம்புவது' எனவும் அவர் கூறியுள்ளார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!