மனம் மாறிய தங்கத்தமிழ்செல்வன்... விழிபிதுங்கும் தேனி அ.தி.மு.க..!

டி.டி.வி.தினகரனின் அணியில் இருந்து, ஓ.பன்னீர் செல்வத்தை கடுமையாக விமர்சித்து வந்தவர் ஆண்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ தங்கத்தமிழ்ச்செல்வன். இருவரும் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். தற்போது அவர், 'கட்சியை உடைக்க மாட்டோம். அ.தி.மு.கவின் இரு அணிகளும் இணைந்து செயல்படுவோம்', எனக் கூறியுள்ளார்.

thanga tamilselvan

நேற்று இரவும் சரி, இன்று காலையும் சரி ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைபாட்டுக்கு தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தவர் ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ தங்கத்தமிழ்ச்செல்வன். தேனி மாவட்ட அரசியலிலும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடுமையான போட்டியாக இருந்தவர் தங்கத்தமிழ்ச்செல்வன். அ.தி.மு.க துண்டாகி, காட்சிகள் மாறினாலும் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆதரவு நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார் அவர். 

இன்று காலை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூட, 'அமைச்சர்களின் அவசர நடவடிக்கையில் ஏதோ பின்னணி உள்ளது. அமைச்சர்கள் தன்னிச்சையாகச் செயல்படுகின்றனர். எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் கூட்ட எங்களுக்கு அதிகாரம் உள்ளது', என வீராவேசமாக தெரிவித்தார். இந்நிலையில், தங்கத்தமிழ்ச்செல்வனின் இந்த திடீர் மனமாற்றம் அ.தி.மு.கவின் ரத்தத்தின் ரத்தங்களையே நிச்சயமாக உறைய வைத்திருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!