சசிகலா கோரிக்கை ஏற்கப்படுமா? மே 4-ம் தேதி உத்தரவு

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் காணொலி மூலம் விசாரணை நடத்தக்கோரி சசிகலா தாக்கல் செய்த மனு மீது மே 4-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை எழும்பூர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

sasikala

1997-98-ம் ஆண்டுகளில் அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக டி.டி.வி.தினகரன், சசிகலா உள்ளிட்டவர்கள் மீது அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வழக்கில் நேரில் ஆஜராவதற்கு பதில் காணொலி மூலம் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்று சசிகலா நேற்று முன்தினம் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சசிகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'சசிகலாவுக்கு முதுகுவலி இருப்பதன் காரணமாக நீதிமன்றத்துக்கு காரில் வருவதற்கு சிரமம் என்று தெரிவித்தார். இதனையடுத்து சசிகலா காணொலி மூலம் விளக்கம் அளிப்பது குறித்து மே 4-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!