நீட் தேர்வு விவகாரம்: பிரதமர் மோடிக்கு, முதல்வர் பழனிசாமி கடிதம்

நீட் தேர்வு தொடர்பான தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட சட்டத்துக்கு விரைவில் மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி. பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

edapadi palanisamy


நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு இல்லை என மத்திய அரசு உறுதியாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நீட் தேர்வு குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், 'நீட் தேர்வு தமிழகத்தைச் சேர்ந்த 98 சதவிகித மாணவ, மாணவிகளைப் பாதிக்கும். தமிழக கிராம மக்களின் சமூக பொருளாதாரத்தைப் பாதுகாக்க நீட் தேர்வை தவிர்ப்பது அவசியம். நீட் தேர்வை தவிர்ப்பது பற்றி பிரதமர் மோடி விரைவில் அறிவிக்க வேண்டும்.

மருத்துவ சேர்க்கைக்கான தேர்வில் தற்போதைய நடைமுறையே தொடர வேண்டும். மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் வெளிப்படைத் தன்மை தொடர வேண்டும். நீட் தேர்வு தொடர்பான தமிழக அரசின் சட்டத்துக்கு குடியரசுத் தலைவரிடம் இருந்து விரைவில் ஒப்புதல் பெற்றுத் தர வேண்டும்' என்று கடித்தத்தில் குறிப்பிட்டிருந்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!