இரட்டை இலை விவகாரம்: இரு அணியினருக்கும் தேர்தல் ஆணையம் அவகாசம்! | Election Commision extends period over admk party symbol issue

வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (21/04/2017)

கடைசி தொடர்பு:14:59 (21/04/2017)

இரட்டை இலை விவகாரம்: இரு அணியினருக்கும் தேர்தல் ஆணையம் அவகாசம்!

அ.தி.மு.க-வின் இரட்டை இலைச் சின்னம் தொடர்பான விவகாரத்தில், இரு அணியினருக்கும் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எழுந்த உள்கட்சி மோதலால் உடைந்த அ.தி.மு.க., இரு அணிகளாக இடைத்தேர்தலைச் சந்தித்ததன் விளைவாக, இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது. இதையடுத்து, இரு அணிகளும் சின்னத்தைத் தங்களுக்கு ஒதுக்கக்கோரி, தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டன.

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல்செய்ய அவகாசம் வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம். சசிகலா தரப்பு  எட்டு வாரங்கள் அவகாசம் கேட்ட நிலையில், ஜூன் 16-ம் தேதி வரை சசிகலா, ஓ.பி.எஸ் அணியினருக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.