ஆளுநர் வித்யாசாகர் ராவ் காரிலிருந்து சிவப்பு சுழல் விளக்கு அகற்றம்

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் காரில் இருந்து சிவப்பு சுழல் விளக்கு அகற்றப்பட்டதாக ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

vidyasagar rao


வி.ஐ.பி கலாசாரத்தை ஒழிக்கும் நோக்கில் குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர்கள் உள்பட யாரும் இனிமேல் காரில் சிவப்பு சுழல் விளக்குகளைப் பயன்படுத்தக் கூடாது என்று மத்திய அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது. இதனையடுத்து முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் தங்களது கார்களில் இருந்த சிவப்பு விளக்குகளை அகற்றினர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் நேற்று தனது காரிலிருந்த சிவப்பு சுழல் விளக்கை தானே அகற்றினார்.

தற்போது தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் காரிலிருந்து சிவப்பு சுழல் விளக்கு அகற்றப்பட்டதாக ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வித்யாசாகரின் முதன்மைச் செயலாளர்  ரமேஷ் சந்த் மீனா சிவப்பு சுழல் விளக்கை அகற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!