கருணாநிதி நன்றாக இருந்திருந்தால் இது நடந்திருக்கும்! மு.க.ஸ்டாலின் ஆதங்கம்

கருணாநிதி நன்றாக செயல்படும் நிலையில் இருந்திருந்தால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்று தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

m.k.stalin


தி.மு.க மூத்த தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் பிறந்தநாள் விழா நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் துரைமுருகன், பா.ம.க இளைஞர் அணித் தலைவர் அன்புமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். அந்த விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், 'தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் இன்று ஊழல் தலைவிரித்தாடுகிறது. அரசுத் துறைகளில் ஊழல் நடைபெறுவது மக்களுக்கு தெரிந்தால், மக்கள் என்னிடம் தெரிவிக்கலாம். அதன் மூலம் ஊழலை வெளிக்கொணர முடியும். இதற்காக தி.மு.க உணவர்வாளர்கள், மக்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.

விவசாயிகள் பிரச்னை, குடிநீர் பிரச்னை, மதுக்கடைப் போராட்டம் ஆகிய பிரச்னைகளில் ஆளும் கட்சியினர் ஒன்று சேரவில்லை. ஆனால் நான்கு ஆண்டுகள் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள இரு அணியினரும் முயன்று வருகின்றனர். தற்போதுள்ள அரசியல் சூழலில் கருணாநிதி நன்றாக செயல்படும் நிலையில் இருந்தால் ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கும்' என்று தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!