வெளியிடப்பட்ட நேரம்: 18:41 (22/04/2017)

கடைசி தொடர்பு:18:41 (22/04/2017)

டெல்லி புறப்பட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி : விவசாயிகளை சந்திக்க வாய்ப்பு

டெல்லியில் நாளை நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டு சென்றார். 

edapadi palanisamy


தமிழகத்தின் அரசியல் சூழல் மிகுந்த பரபரப்பாக இருந்து வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் அணியும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும் அ.தி.மு.கவின் இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டு சென்றார். முதலமைச்சர்கள் பங்கேற்கும் நிதிஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார்.

மேலும் அவர் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் ஜி.எஸ்.டி விளக்கக் கூட்டத்திலும் பங்கேற்க உள்ளார். டெல்லியில் ஒரு மாதத்திற்கு மேலாக தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாளுக்கு நாள் அவர்களுடைய போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டறிவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே முதல்வர் பழனிசாமி தங்களைச் சந்தித்தால் போராட்டத்தை கைவிடுவோம் என்று விவசாயிகள் தரப்பில் கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.