வெளியிடப்பட்ட நேரம்: 01:18 (25/04/2017)

கடைசி தொடர்பு:07:46 (25/04/2017)

டி.டி.வி. தினகரன் இன்றும் ஆஜராக உத்தரவு!

தினகரன்

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, அ.தி.மு.க இரண்டு அணிகளாகப் பிரிந்தது. அப்போது நடைபெற இருந்த ஆர்.கே.நகர் தேர்தலில், இரண்டு அணிகளும் இரட்டை இலைச் சின்னத்தைப் பயன்படுத்தக்கூடாது எனத் தேர்தல் ஆணையம் முடக்கியது. அதை மீட்க, டி.டி.வி. தினகரன் கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். டி.டி.வி. தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவுசெய்தனர்.

அந்த வழக்கு தொடர்பாக, கடந்த  சனியன்று விசாரணைக்காக டெல்லிக்குச் சென்றார் தினகரன். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்களைக் கடந்து, நாளையும் தொடரவிருக்கிறது.

திங்கள்கிழமை, சுமார் 9 மணி நேரம் டி.டி.வி. தினகரனை விசாரித்த போலீஸார், நாளை மாலையும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். அதன்படி, இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு ஆஜராக இருக்கிறார். டி.டி.வி. தினகரின் நண்பர் மல்லிகார்ஜூனாவும், உதவியாளர் ஜனார்த்தனனும் ஆஜராக வேண்டும் என்று உத்தவிட்டுள்ளனர், டெல்லி குற்றப்பிரிவு போலீஸார்.