நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் தினகரன்..!

இரட்டை இலைச் சின்னத்தைத் தங்கள் அணிக்குப் பெறுவதற்காக லஞ்சம் கொடுத்த வழக்கில், டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள டி.டி.வி தினகரன், இன்று பிற்பகலில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

dinakaran

தினகரனுடன் அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவும் கைதுசெய்யப்பட்டுள்ளார். தினகரனிடம் மேல் விசாரணை நடத்த, டெல்லி காவல்துறையினர் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்செய்வர் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனிடையே, கைதுசெய்யப்பட்ட தினகரனை டெல்லி காவல்துறையினர், இன்று பிற்பகலில் ஆஜர்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, அவரை காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!