'இரட்டை இலை' சின்னம்: ஓ.பி.எஸ் அணி 6,500 பக்க கூடுதல் ஆவணங்கள் தாக்கல்!

இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கில், தேர்தல் கமிஷனிடம் 6,500 பக்கங்கள்கொண்ட கூடுதல் ஆவணங்களை பன்னீர்செல்வம் அணியினர் தாக்கல்செய்துள்ளனர்.

ops

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், சசிகலா பொதுச் செயலாளர் ஆனார். பிறகு, அப்போது முதல்வர் பதவியில் இருந்த ஓ.பன்னீர் செல்வத்துக்கும் சசிகலாவுக்கும் மோதல் வெடித்தது. தொடர்ந்து, இரண்டு அணியாக உடைந்தது அ.தி.மு.க. சில எம்எல்ஏ-க்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஓ.பி.எஸ் பக்கம் தாவ, எம்எல்ஏ தரப்பில் பலர் சசிகலா பக்கம் சென்றனர். இந்த நிலையில், சசிகலா சிறை, தினகரனுக்குப் பதவி என காட்சிகள் மாறின. தேர்தல் ஆணையத்தால் 'இரட்டை இலை' சின்னமும் முடக்கப்பட்டது. 

இந்த நிலையில், இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமை கோரி, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்தில் கூடுதலாக  6,500 பக்கங்கள்கொண்ட பிரமாணப்பத்திரம் தாக்கல்செய்துள்ளனர். தங்களுக்கு, 40 லட்சம் உறுப்பினர்களுக்கு மேல் ஆதரவு இருப்பதாகத் தேர்தல் கமிஷனிடம் ஓ.பி.எஸ் அணியினர் முன்னர் கடிதம் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!