டி.டி.வி.தினகரன் கைதுக்கு யார் காரணம்? பொன்னையன் புது விளக்கம்!

'டி.டி.வி.தினகரன் கைதான சம்பவத்துக்கும் பா.ஜ.க அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை' என்று ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த பொன்னையன் தெரிவித்துள்ளார்.

ponnaiyan


தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சிசெய்த வழக்கில், டி.டி.வி.தினகரனை டெல்லி காவல்துறையினர் நேற்றிரவு கைது செய்தனர். இதனிடையே, எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் அதிகாரபூர்வமான பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த பொன்னையன், 'ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள்குறித்து ஊடகங்கள் ஏராளமான கேள்வி எழுப்பியிருந்தன. சசிகலா குடும்பத்தை கட்சியைவிட்டு நீக்கியிருந்தார் ஜெயலலிதா. அதனால், ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல், சசிகலா குடும்பம் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதா என்றும் ஊடகங்கள் கேள்வி எழுப்பின. தினகரன் கைதுசெய்யப்பட்ட விவகாரத்தில், பா.ஜ.கவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை' என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!