பன்னீர்செல்வம்- பழனிசாமி அணியை விளாசும் சசிகலா புஷ்பா

தமிழகத்தில் அதிமுகவின் இரு அணிகளும் சேர்ந்து நல்ல நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என விமர்சித்துள்ளார் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா.

sasikala pushpa

ஜெயலலிதா மறைவு முதலே பல அதிரடி மாற்றங்களை அனுதினமும் சந்தித்து வருகிறது தமிழக அரசியல். ஓ.பி.எஸ் பிரிவு, சசிகலா கைது என ஆரம்பித்த சதுரங்க விளையாட்டு தற்போது இரு அணிகள் இணைப்பு, டி.டி.வி தினகரன் கைது என பரபரப்பை எட்டியுள்ளது. இதனிடையே தமிழக அரசியல் சூழலில் இரு அணிகளும் நாடகம் தான் போடுகின்றன என விமர்சித்துள்ளார் மாநிலங்களவை எம்.பி சசிகலா புஷ்பா.

இரு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தையின் முதல் நடவடிக்கையாக இன்று அதிமுக அலுவலகத்தில் இருந்த சசிகலா பேனர்கள் அகற்றப்பட்டன. இதுகுறித்து சசிகலா கூறுகையில்,' பன்னீர்செல்வம்- பழனிசாமி இடையே அதிகாரப் போட்டியே தற்போது நிலவுகிறது. இரு அணிகளும் நல்ல நாடகத்தை நடத்தி, அடிமட்ட உறுப்பினர்களை ஏமாற்றி வருகிறார்கள்' என விமர்சித்துள்ளார். மேலும் தமிழகத்துக்கு கொள்கை சார்ந்த கட்சியே தேவை எனவும் அவர் கூறியுள்ளார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!