கேரள அமைச்சர் எம்.எம்.மணிக்கு எதிராக நடிகை நக்மா போர்க்கொடி

விவசாயிகள் பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு, மாநில அரசைக் குற்றம் சாட்டுகிறது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நக்மா தெரிவித்தார்.


காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நடிகை நக்மா சென்னை வந்துள்ளார். அவர் காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'நாடு முழுவதும் விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் மத்திய அரசு விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.

மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது 77,200 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டது. தேர்தலுக்கு முன்னர் அளித்த வாக்குறுதியை பா.ஜ.க நிறைவேற்றவில்லை. தமிழ்ப் பெண்களை இழிவாகப் பேசிய கேரள அமைச்சர் எம்.எம்.மணியை பதவியில் இருந்து நீக்க வேண்டும். தமிழகத்தில் பா.ஜ.க கால் ஊன்றுவதற்கு பல வழிகளில் முயற்சிகள் செய்துவருகிறது' என்றார்.

படங்கள்: வி.ஸ்ரீனிவாசலு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!