'எங்கள் பக்கம் 87 எம்.எல்.ஏ.க்கள்...!' - பகீர் கிளப்பும் நாஞ்சில் சம்பத் | We have 87 MLA's on our side, says Najil Sampath

வெளியிடப்பட்ட நேரம்: 19:02 (27/04/2017)

கடைசி தொடர்பு:19:07 (27/04/2017)

'எங்கள் பக்கம் 87 எம்.எல்.ஏ.க்கள்...!' - பகீர் கிளப்பும் நாஞ்சில் சம்பத்

டி.டி.வி தினகரன், இன்று காலை டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். விமான நிலையத்தில் இருந்து, தினகரனை அவருடைய அடையார் இல்லத்துக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்று, அங்கு விசாரணை நடத்தினர். 

இதையடுத்து, அடையாறில் இருக்கும் தினகரன் வீட்டுக்கு முன்னால் இருந்து தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், 'டி.டி.வி.தினகரன் மீதான வழக்கின் விசாரணை முடிந்தவுடன் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போவது அவர் மட்டுமே. தற்போது அவருக்கு எதிராக நடந்து வரும் விசாரணைக்கு நாங்கள் யாரும் இடையூறாக இருக்கமாட்டோம். அவரைக் காப்பற்றுவதற்கு நாங்கள் எதை வேண்டுமானாலும் செய்வோம். எந்த அநியாயத்தையும் அதிகார பீடத்தில் இருப்பவர்கள் செய்வார்கள். தற்போது, தினகரன் மீது பொய்யான வழக்கு புனையப்பட்டு டெல்லி தான் சதி செய்கிறது. எங்கள் பக்கம் 87 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். தொடர்ந்து 37 மணி நேரம் தினகரனிடம் விசாரணை நடத்திய பின்னரும் இன்னும் என்ன விசாரிக்க வேண்டி இருக்கிறது என்பது தெரியவில்லை. பொதுச்செயலாளர் கையெழுத்து இல்லாமல் கட்சியில் எதுவும் செய்ய முடியாது. சசிகலா கண் அசைவு இல்லாமல் எதுவும் நடக்காது.' என்று பேசியுள்ளார்.