அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தாமதமாகும் குட்டு உடைந்தது!

அ.தி.மு.க-வின்  இரு அணிகளையும் இணைப்பதற்காக, அ.தி.மு.க. அம்மா அணியின் மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக்  கூட்டம், கடந்த மூன்று  நாள்களாக சென்னையில் நடந்துவருகிறது.

 இந்தக் கூட்டத்தில், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளிடம்  பிரமாணப்பத்திரம் பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது.
 அந்தப் பிரமாணப்பத்திரத்தில், 'கட்சியை வலுப்படுத்த பொதுச்செயலாளர் சசிகலா, துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கு ஆதரவாக இருப்போம். எடப்பாடி  பழனிசாமி முதலமைச்சராக நீடிப்பதற்கு உறுதுணையாக இருப்போம்' என்று  எழுதப்பட்டு இருந்ததாக ஓ.பி.எஸ். அணிக்குத் தகவல் கிடைக்கவே, பேச்சுவார்த்தை பஞ்சாயத்தாக மாறிப்போய் இருக்கிறது.

 'இணைப்பு என்ற பெயரில் இப்படியொரு பிரமாணப்பத்திரத்தையும் ஒருபக்கம் வாங்கி வைத்துக்கொண்டு, அணிகள் இணைப்பு, கட்சி அலுவலகத்தில் சசிகலா பேனர் கிழிப்பு' என்று எதிரணி நாடகமாடுவதாக ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான புரட்சித்தலைவி அம்மா அணியினர் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.

ஏறக்குறைய 'நதிகள் இணைப்பு போலத்தான் இந்த இணைப்பும் நீண்டகால கனவுத்திட்டம் போலாகுமோ' என்று தொண்டர்கள் பேசிவருகிறார்கள்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!