இது மலிவான விளம்பரம்! விளாசும் வெங்கய்ய நாயுடு

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தேவையற்ற மலிவான விளம்பரங்களில் மட்டுமே விருப்பம் காட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளார் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு.

venkaiah

இன்று சண்டிகர் வந்துள்ள மத்திய ஒலிபரப்புத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு அண்மையில் நடந்த டெல்லி மாநகராட்சி தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலையும் அவர் விமர்சித்துள்ளார். இதுகுறித்து வெங்கய்ய நாயுடு கூறுகையில்,' தோல்வியின் காரணமாக வாக்குப்பதிவு இயந்திரங்களை குறை கூறுவது முறையல்ல. கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக வெற்றி பெற்ற தேர்தலின் போதும், சமீபத்தில் பஞ்சாப்பில் காங்கிரஸ் வெற்றி பெற்ற போதும்  இதே இயந்திரங்கள் தான் பயன்படுத்தப்பட்டன.

தோல்வியுற்ற பிறகு தேர்தல் ஆணையத்தையும், வாக்குப்பதிவு இயந்திரங்களையும் குறை சொல்லி மலிவான விளம்பரங்களை தேடிக்கொள்ள கெஜ்ரிவால் முயற்சிக்கிறார்' என விமர்சித்துள்ளார். மேலும், அண்மையில் நடந்த மாவோயிஸ்ட் தாக்குதல் குறித்து அவர் கூறுகையில்,'ஆயுதங்கள் மூலம் அதிகாரத்தினை அடைவது வழக்கொழிந்து விட்டது. உண்மையான அதிகாரம் தேர்தல்களின் மூலமே கிடைக்கக் கூடியது' எனக் கூறியுள்ளார்.   
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!