Published:Updated:

லாலுவுக்கு பரிசு: ராஷ்டிரிய ஜனதா தளம் ஒப்புதல்!

முன்னாள் மத்திய அமைச்சர்கள் ரகுநாத் ஷா, காந்தி சிங் ஆகியோர் லாலு பிரசாத்தின் குடும்பத்தினருக்கு நிலத்தை பரிசாக வழங்கினர் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் ஒப்புக் கொண்டுள்ளது. எனினும் மத்திய அமைச்சர் பதவிகளைப் பெறுவதற்கான வழங்கப்பட்டதல்ல என்று அக்கட்சி மறுத்துள்ளது.

லாலுவுக்கு பரிசு: ராஷ்டிரிய ஜனதா தளம் ஒப்புதல்!

கடந்த 2004-ம் ஆண்டில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் மத்திய அமைச்சர்கள் பதவிகளைப் பெறுவதற்காக ரகுநாத் ஷா, காந்தி சிங் ஆகியோர் லாலு பிரசாத் குடும்பத்தினருக்கு நிலத்தைப் பரிசாக வழங்கினர் என்று பி.ஜே.பி மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி குற்றம்சாட்டியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில், ராஷ்டிரிய ஜனதா தளம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காந்தி சிங் நிலம் வழங்கியது உண்மைதான் என்று கூறப்பட்டுள்ளது. காந்தி சிங்கும், அவரது குடும்பத்தினரும் பாட்னா அருகே தானாப்பூரில் சுமார் 41 ஆயிரம் சதுர அடி நிலத்தை லாலுவின் மனைவி ராப்ரி தேவிக்கு முதலில் குத்தகைக்கு அளித்ததாகவும், பின்னர் 2010-ம் ஆண்டு பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் 2005-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்ததால், அவருக்கு பாட்னாவில் இருப்பிடம் தேவைப்பட்டது என்றும், அதற்காக தங்கள் குடும்பத்துக்குச் சொந்தமான நிலத்தை முதலில் குத்தகைக்கும், பின்னர் விலைக்கும் கொடுத்ததாக காந்தி சிங் தெரிவித்துள்ளார். சுஷில் குமார் கூறுவதைப் போன்று மத்திய அமைச்சர் பதவியைப் பெறுவதற்காக அல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் ரகுநாத் ஷாவும் நிலம் பரிசாகக் கொடுத்ததாகக் கூறப்படுவதை ஆர்.ஜே.டி மறுத்துள்ளது. பீகார் மாநிலத்தில் லாலு பிரசாத் குடும்பத்துக்கு நிலம் பரிசாகக் கொடுத்த விவகாரம் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.