மே மாதம் அமித் ஷா தமிழகம் வருகை: தமிழிசை தகவல்

 பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா, மே மாதம் தமிழகம் வரவுள்ளதாக, மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

amit shah

பா.ஜ.க-வை பலப்படுத்தும் நோக்கில், அதன் தேசியத் தலைவர் அமித் ஷா, நாடு முழுவதும் 95 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, இன்று காஷ்மீரில் தனது பயணத்தைத் தொடங்கினார். 2019 மக்களவைத் தேர்தலைக் குறிவைத்து இந்தப் பயணம் அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டது. இதனிடையே, அமித் ஷா  மே மாதம் தமிழகம் வருவதாக, பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.

இதுகுறித்து, இன்று வேலூரில் பேசிய தமிழிசை,' அமித் ஷாவின் 95 நாள்கள் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, மே 10-ம் தேதி சென்னை வருகிறார். இதையடுத்து 12-ம் தேதி கோவையில் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார்' எனக் கூறியுள்ளார். மேலும், 'தமிழகத்தில் பா.ஜ.க நேர் வழியில் ஆட்சியைப் பிடிக்கும் எனவும், தி.மு.க-வைவிட பா.ஜ.க-வுக்கு தமிழ் மீது அக்கறை உள்ளது' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!