காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்தி திணிப்பு குறித்து பேசாதது ஏன்? - மு.க.ஸ்டாலினுக்கு நிர்மலா சீதாராமன் கேள்வி

காங்கிரஸ் ஆட்சியில் தி.மு.க பங்கேற்றிருந்த பொழுது மு.க.ஸ்டாலின் இந்தி திணிப்பு குறித்து பேசாதது ஏன் என்று மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார். 

Nirmala sitharaman


மத்திய இணைஅமைச்சர் நிர்மலா சீதாராமன் சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சி பணியை நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். இன்று டெல்லி திரும்பிய அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், 'மத்திய அரசு இந்தி மொழியை திணிக்கவில்லை. ஏதேனும் ஒரு இடத்தில் தமிழ் மொழியை அகற்றிவிட்டு இந்தி மொழி சேர்க்கப்பட்டு இருந்தால் அதற்கு மத்திய அரசு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளது. கொடநாடு எஸ்டேஸ்ட்டில் நடைபெற்ற கொலை சட்டம் ஒழுங்கு தொடர்பான விவகாரம். அதில் மாநில அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் தி.மு.க பங்கேற்றிருந்த போது மு.க.ஸ்டாலின் இந்தி திணிப்பு குறித்து பேசாதது ஏன்?' என்று கேள்வி எழுப்பினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!