முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்!

பரபரப்பான அரசியல் சூழலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை நாளை கூடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தலைமை செயலகம்

தமிழக முதலைமச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நாளை காலை 11 மனியளவில் தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது. பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், மானிய கோரிக்கைகள் பற்றியும் நாளை விவாதிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

இதனிடையே விவசாயிகள் பிரச்னை, நீட் தேர்வு விவகாரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் நாளை முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் மூன்றாவது அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும். அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கான  பேச்சுவார்த்தை நடைபெறாத நிலையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!