Published:Updated:

தாவூத் இப்ராஹிம் குறித்து துப்புக் கொடுத்த சு.சுவாமி!

தாவூத் இப்ராஹிம் குறித்து துப்புக் கொடுத்த சு.சுவாமி!
தாவூத் இப்ராஹிம் குறித்து துப்புக் கொடுத்த சு.சுவாமி!

தாவூத் இப்ராஹிம் குறித்து துப்புக் கொடுத்த சு.சுவாமி!

மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், சீனாவில் இருப்பதாக பா.ஜ.க ராஜ்யசபா எம்.பி., சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

தாவூத் இப்ராஹிம் குறித்து துப்புக் கொடுத்த சு.சுவாமி!

தாவூத் இப்ராஹிம், மூளையில் ஏற்பட்டுள்ள பாதிப்பால் அவதிபட்டுவருவதாக, கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் செய்தி பரவிவந்தது. இந்த நிலையில், இன்று ராஜ்யசபா எம்.பி., சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், தாவூத் குறித்து ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அதில், தாவூத் இப்ராஹிமின் இருப்பிடம் தனக்குத் தெரியும் என்றும், சில நம்பத்தகுந்த இடத்தில் தனக்கு இந்தத் துப்பு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தச் செய்தியை உறுதிபடுத்த சில நண்பர்களிடம் கேட்டிருப்பதாகவும், அதுவரை பொறுமை காக்குமாறும் தெரிவித்துள்ளார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இன்று மதியம் சு.சுவாமி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ’தாவூத், செயற்கைக் கால் பொருத்த சீனாவில் இருப்பதாகத் தெரிகிறது. சீனாவிலுள்ள நண்பர்களிடம் உறுதிப்படுத்தக் கேட்டுள்ளேன். காத்திருங்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

தாதா தாவூத் இப்ராஹிம், 1993-ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளி. மேலும், இந்தியாவில் நடைபெற்ற பல தீவிரவாதத் தாக்குதல்களுக்குத் துணை நின்றதாகவும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் கொலை வழக்கு, கறுப்புப் பணம் மாற்றம், சொத்துக்குவிப்பு எனப் பல குற்ற வழக்குகள், தாவூத் இப்ராஹிம் மேல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு