Published:Updated:

தூய்மையாகிவரும் இந்திய நகரங்கள்... மத்திய அரசு பெருமிதம்!

தூய்மையாகிவரும் இந்திய நகரங்கள்... மத்திய அரசு பெருமிதம்!
தூய்மையாகிவரும் இந்திய நகரங்கள்... மத்திய அரசு பெருமிதம்!

இந்திய நகரங்கள் முன்பைவிடத் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் மாறிவிட்டதாக மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் நகர்ப்புறத்தில் வசிக்கும் மக்களிடம், சுற்றுச்சூழல் மாசுகுறித்து கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது மத்திய அரசு. கருத்துக்கணிப்பின் முடிவில் சுகாதார அளவைவைத்து நகரங்களைப் பட்டியலிட்டுள்ளனர் அதிகாரிகள். இதுகுறித்த விரிவான அறிக்கை நாளை வெளியிடப்படும் என்று நகர்ப்புற அமைச்சகம் அறிவித்துள்ளது. 

தூய்மையாகிவரும் இந்திய நகரங்கள்... மத்திய அரசு பெருமிதம்!


 

’ஸ்வாட்ச் சர்வேக்ஷன்’ என்னும் பெயரில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், 434 நகரங்களில் வசிக்கும் 18 லட்சம் பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. அவர்களில், 83 சதவிகிதம் பேர் முன்பைவிட இந்திய நகரங்கள் தூய்மையாகிவிட்டதாகக் கருத்து சொன்னதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த ஆய்வு குறித்துக் கருத்து தெரிவித்த மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் வெங்கய்யா நாயுடு, 'தூய்மை இந்தியா திட்டம் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், நகரங்கள் தூய்மையாகிவருவதாகத் தெரிவித்துள்ளனர். கடந்த ஓர் ஆண்டில், நகரங்களில் காணப்படும் குப்பைகளில் கனிசமான அளவு குறைந்துள்ளதாக மக்கள் கருதுகின்றனர்' என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.