Published:Updated:

எங்கிருந்து ஆதார் தகவல் கசிந்தது? அதிரவைத்த மத்திய அரசின் பதில்!

எங்கிருந்து ஆதார் தகவல் கசிந்தது? அதிரவைத்த மத்திய அரசின் பதில்!
எங்கிருந்து ஆதார் தகவல் கசிந்தது? அதிரவைத்த மத்திய அரசின் பதில்!
எங்கிருந்து ஆதார் தகவல் கசிந்தது? அதிரவைத்த மத்திய அரசின் பதில்!

'ஆதார் அமைப்பில் இருந்து ஆதார் அட்டை தொடர்பான எந்தத் தகவலும் வெளியாகவில்லை. சில அரசு துறைகளில் இருந்துதான் விவரம் கசிந்துள்ளது' என்று ஆதார் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முன்னர், வங்கிக் கணக்கு உள்ளிட்ட தனிநபர் தொடர்பான தகவல்கள் ஆதார் மூலம் கசிவதாக புகார்கள் வந்தன.  மத்திய, மாநில அரசுகளின் மிகமோசமான இணையப் பாதுகாப்பு நடைமுறைகள் காரணமாக 13.5 கோடி ஆதார் அட்டை பற்றிய தகவல் திருடப்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. சென்டர் ஃபார் இன்டர்நெட் அன்ட் சொசைட்டி என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இது தெரியவந்தது.

ஆதார் தகவல் வெளியே கிடைக்காமல் தடுக்க யுனிக் ஐடன்டிஃபிகேஷன் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். 'தகவல் வெளியேறாமல் இருக்க எடுக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அந்த அமைப்புக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. மேலும், இரண்டு மாதங்களுக்கு மேலாக இணையத்தில் தகவல்கள் வெளியாவது தெரிந்தும், அதைத் தடுக்கப் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை' என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்தான், மத்திய அரசு ஆதார் அமைப்பில் இருந்து தகவல்கள் வெளியாகவில்லை என்று கூறியுள்ளது.