'அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்' காமெடிக்கும் அரசாங்கத்துக்கும் சம்பந்தம் இருக்கு...!

மத்திய அரசுக்கு நிகராக மாநில அரசுக்கும் இணையான அதிகாரங்களை வழங்குவோம்னு சொல்லித்தான் ஓட்டுக்கேட்டு ஜெயிச்சாங்க பா.ஜ.க. ஆனா சொன்னபடி அவங்க செஞ்சாங்களான்னு பார்க்கலாமா மக்களே.

ஹைட்ரோ கார்பன் : முதல்ல மீத்தேன் வாயு எடுக்கப்போறோம்னு ஒரு க்ரூப் வந்து ரொம்பநாளா டேரா போட்டு உட்கார்ந்து இருந்தாங்க. அதுக்கப்புறம் அது வேலைக்கு ஆகாம ஆறப்போட்டுவச்சு திரும்பவும் வந்தாங்க. ஏதும் நியூமராலஜிப்படி மாத்திருப்பாங்களோ என்னவோ மீத்தேன் எடுக்கும் திட்டத்தை 'ஹைட்ரோ கார்பன்' மட்டும் எடுக்கும் திட்டம்னு மாத்தி வச்சிக்கிட்டு வந்தாங்க. அசோகன் காலத்துப் பழைய படத்துல கூட கன்னத்துல மரு வச்சிக்கிட்டுத்தான் வருவாங்க. இதுல அதை கூட வைக்காம வந்துட்டாங்கங்கிறதுதான் ஹைலைட். நிறைய போராட்டங்களுக்கு பிறகு ஒரு வழியா மக்களோட பக்கம் தலை ஆட்டுறமாதிரி ஆட்டி கூட்டத்தைலாம் கலைச்சு விட்டுட்டு, கடைசியில, 'நீங்க போராட்டம் பண்ணுங்க பண்ணாம போங்க... நாங்க சொல்றதைக்கேளுங்க இல்ல  கேட்காம போங்க... ஆனா நாங்க ஹைட்ரோ கார்பனை எடுத்தே ஆவோம் ஆங்' னு ஒரு முடிவோட சொல்லிட்டுப் போயிட்டாங்க மத்திய அரசு.

ஊத்தப்பம்

விவசாயிகள் போராட்டம்: எத்தனை நாள்னு கணக்கே இல்லாம டெல்லியில உட்கார்ந்து போராட்டம் பண்ணுனாங்க தமிழக விவசாயிகள். நம்மதான் பிரதமரான்னு பிரதமருக்கே சந்தேகம் ஏதும் வந்துச்சோ என்னவோ தெரியல, என்ன ஏதுன்னு அதை எட்டிக்கூட பார்க்கலை. அவரு பண்ணுனது கூட பரவாயில்லை. போராட்டத்துல கலந்து 'நாங்க இருக்கோம்...' னு வாசன் ஐ கேரையே மிஞ்சுற அளவுக்கு விவசாயிகள் கிட்டப் பேசி சமாதானம் பண்ணி போராட்டத்தையும் வாபஸ் வாங்க வச்சார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனா கதையிலயே அதுக்கு அப்புறம்தான் ட்விஸ்ட். போராட்டம் முடிஞ்சி திரும்பிவந்த எடப்பாடியார் தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரி டீல் பண்ணிக்கிட்டு இருக்குற மத்திய அரசு மாதிரியே 'விவசாயிகளோட மரணத்துக்கும் விவசாயம் பொய்த்துப்போனதுக்கும் சம்பந்தம் இல்லை'ன்னு அறிக்கை விட்டாரு.


நீட் தேர்வு: தமிழ்நாட்டுல போராட்டங்களுக்கு ரெஸ்ட் கொடுக்குற அளவுக்கா ஆட்சி நடத்திட்டு இருக்குறாங்க. போராட்டங்களுக்குப் பஞ்சம்லாம் இல்லைதானே.  அங்க கொஞ்சம் இங்க கொஞ்சமான்னு புகைஞ்சிக்கிட்டு இருந்த 'நீட் தேர்வு' பிரச்னைதான் இப்ப ஒரே இடத்துல குவிஞ்சு பரபரப்பாக ஓடிக்கிட்டு இருக்குது. ஆனா மத்திய அரசு அதைலாம் காதுல வாங்குதான்னு பார்த்தா அதை ஆராய்ஞ்சு பார்த்துக்கிட்டு இருக்குற நேரத்துக்கு வேற எதாது உருப்படியான வேலையைப் பார்க்கலாம் போல, அந்தளவுக்குதான் ஆக்டிவிட்டி எல்லாம் இருக்குது. இதெல்லாம் சும்மா ஒரு எக்ஸாம்பிள்தான். இதுமாதிரி இன்னும் பல விசயங்கள் இருக்குது மக்களே. அதுக்குள்ளலாம் போனா இன்னைக்கு ஃபுல்லா உட்கார்ந்து படிக்கலாம் அந்தளவு லிஸ்ட்கள் பெருசு....

ஊத்தப்பம்

வடிவேலு ஒரு படத்துல ஹோட்டல்  சப்ளையர்கிட்ட,  'ஒரு சொம்பு தண்ணியை எடுத்து தோசைக்கல்லுல  ஊத்தி, அதுக்குனு வழக்கமா வச்சிருக்க வெளக்கமாத்தால க்ளீன்பண்ணிட்டு ஒரு கிண்ணம் நிறைய மாவை எடுத்து  ஊத்தி, சின்ன ரவுண்டாவும் இல்லாம பெரிய ரவுண்டாவும் இல்லாம பொதுவா ஒரு ரவுண்டை ஊத்தி, நாலு அஞ்சு வெங்காயத்தையும்  கேரட்டையும் எடுத்து, அப்படியே பொடிபொடிபொடிபொடியா  நறுக்கி பரபரபரபரன்னு தூவிவிட்டு, நெய்யை ரெண்டு பக்கமும் ஊத்தி இட்லிபொடியை மழைச்சாரல் மாதிரி அப்டியே பெய்யவிட்டு, பொத்துனாப்புல... அப்படி ஒரு  புரட்டு, இப்படி ஒரு  புரட்டு புரட்டி, 'கமகம'ன்னு ஒரு ஊத்தப்பத்தை எடுத்துட்டு வாங்கன்னு ஆர்டர் பண்ணுவார். ஆனா அவ்வளவையும் கேட்டுட்டு அதைல்லாம் கொஞ்சம்கூட கண்டுக்காமல் கடைசியில, 'அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்...' னு அசால்ட்டா சொல்லிட்டுப்போயிடுவார் சப்ளையர். ஏன் எதுக்குன்னு தெரியலை. மக்கள் வைக்கிற கோரிக்கைகளையும் அதுக்கு அரசாங்கத்தோட ரியாக்சனையும் பார்க்கும்போது அந்தக்காமெடிதான் ஞாபகத்துக்கு வருது மக்களே....

Do you like the story?

Please Appreciate the Author by clapping!