Published:Updated:

பாகிஸ்தான் மறுப்பு தெரிவிப்பதில் நம்புவதற்கு ஏதுமில்லை: அருண் ஜெட்லி காட்டம்!

ராகினி ஆத்ம வெண்டி மு.
பாகிஸ்தான் மறுப்பு தெரிவிப்பதில் நம்புவதற்கு ஏதுமில்லை: அருண் ஜெட்லி காட்டம்!
பாகிஸ்தான் மறுப்பு தெரிவிப்பதில் நம்புவதற்கு ஏதுமில்லை: அருண் ஜெட்லி காட்டம்!

’பாகிஸ்தான் ராணுவத் தாக்குதலில் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டு உடல் சிதைக்கப்பட்டதற்கு தாங்கள் காரணமல்ல என்ற பாகிஸ்தானின் மறுப்பு நம்பத்தகுந்ததாக இல்லை’ என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார். 

பாகிஸ்தான் மறுப்பு தெரிவிப்பதில் நம்புவதற்கு ஏதுமில்லை: அருண் ஜெட்லி காட்டம்!

இரண்டு நாள்களுக்கு முன்னர் இந்திய ராணுவ வீரர்கள் இருவர் பாகிஸ்தான் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டு உடல் சிதைக்கப்பட்டிருந்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இந்தியா, தக்க பதிலடி கொடுக்கப்படும் என அறிவித்தது. ஆனால், பாகிஸ்தான் தனக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை என மறுப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு மத்திய பாதுகாப்பு மந்திரி அருண் ஜெட்லி கண்டனம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் மறுப்பில் எந்த நம்பகத்தன்மையும் இல்லை என ஜெட்லி கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘நடந்த தீவிரவாதத் தாக்குதலும், இந்திய ராணுவ வீரர்களின் மரணமும் பாகிஸ்தான் ராணுவத்தினருக்குத் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. இந்திய ராணுவ வீரர்களுக்கு நிகழ்ந்த கொடுமையான மரணத்துக்கு பாகிஸ்தானின் பங்கேற்பு இல்லாமல் இருக்காது’ எனக் கூறியுள்ளார்.

நடந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் தொடர்பு உள்ளது என்பதற்கான அத்தனை ஆதாரங்களும் இந்திய ராணுவத்திடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் பதிலடி விரைவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.