Published:Updated:

சொத்துக் குவிப்பு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் மறுசீராய்வு மனுதாக்கல்..!

சி.மீனாட்சி சுந்தரம்
சொத்துக் குவிப்பு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் மறுசீராய்வு மனுதாக்கல்..!
சொத்துக் குவிப்பு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் மறுசீராய்வு மனுதாக்கல்..!

சொத்துக்குவிப்பு வழக்கில் தனக்கு வழங்கப்பட்ட நான்கு ஆண்டு சிறைத் தண்டனையை மறுசீராய்வு செய்யக்கோரி சசிகலா தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

சொத்துக் குவிப்பு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் மறுசீராய்வு மனுதாக்கல்..!

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு கடந்த பிப்ரவரி மாதம் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மூவரும் பெங்களூர் சிறையில் தண்டனை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தங்களுக்கு வழங்கப்பட்ட நான்கு வருட சிறைத் தண்டனையை மறுசீராய்வு செய்ய உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர் சசிகலா தரப்பினர். வழக்கில் இருந்து முழுவதுமாக விடுவிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற பதிவாளரின் பரிசீலனைக்கு இந்த மனு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீராய்வு மனு ஏற்கப்படுமா, நிராகரிக்கப்படுமா என்பது விரைவில் தெரிய வரும்.