Election bannerElection banner
Published:Updated:

பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் ஆந்திரா... முறையிட்ட தமிழகம்... கைவிரித்த மத்திய அரசு!

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் தற்போது எடுக்க முடியாது என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அணை கட்டும் விவகாரத்தில் தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் நடவடிக்கை எடுக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதை தடுத்து நிறுத்தக் கோரி அ.தி.மு.க எம்.பி வேணுகோபால் மத்திய நீர்வளத்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும், இது தொடர்பான வழக்கு விசாரணையில், இரு மாநிலங்களும் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி இரு மாநில அதிகாரிகள் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் இருதரப்பும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கவே, சுமுக முடிவு எட்டப்படவில்லை. இதன் பிறகுதான், அ.தி.மு.க எம்.பி வேணுகோபால் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதினார். இந்த கடிதத்துக்குப் பதில் அளித்துள்ள நீர்வளத்துறை, பாலாறு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கூறிவிட்டது. 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு