"ஜெயலலிதா அறிவித்த 13 அம்ச திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்" : திருமாவளவன் வலியுறுத்தல்

பெண்களுக்கு எதிராக அதிகரித்துவரும் வன்கொடுமைகளை குறைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் உதவவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

திருமா

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,'உலகையே அதிரவைத்த நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு உச்சநீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்திருக்கிறது. கொள்கை அளவில் மரண தண்டனையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எதிர்க்கிறது என்கிற போதிலும் இந்த வழக்கின் கொலை செய்யப்பட்ட நிர்பயாவின் பெற்றோர்களது உணர்வுகளை மதித்து அவர்களுடைய எண்ணத்தை விடுதலைச் சிறுத்தைகளும் அங்கீகரிக்கிறது. 

நிர்பயா வழக்கில் அளிக்கப்பட்டுள்ள தண்டனை நாடெங்கும் பெண்களுக்கு எதிராக அதிகரித்துவரும் வன்கொடுமைகளை குறைப்பதற்கு உதவவேண்டும். அதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். நீதிபதி வர்மா ஆணையத்தின் பரிந்துரைகளை முழுமையாகச் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு முன்வரவேண்டும். நிர்பயா சம்பவத்தைத் தொடர்ந்து பெண்களின் பாதுகாப்புக்கென மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 13 அம்ச திட்டம் ஒன்றை அறிவித்தார். அவரது வழியில் ஆட்சி செய்வதாக சொல்லிக் கொள்பவர்கள் அந்த திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்' என அவர் கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!