மாட்டிக்கொண்ட கெஜ்ரிவால்... மனமுடைந்த அன்னா ஹசாரே! | Anna Hazare deeply saddened by Kejriwal allegation

வெளியிடப்பட்ட நேரம்: 22:17 (07/05/2017)

கடைசி தொடர்பு:22:17 (07/05/2017)

மாட்டிக்கொண்ட கெஜ்ரிவால்... மனமுடைந்த அன்னா ஹசாரே!

லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் சிக்கியுள்ளதால், மிகவும் மனமுடைந்து போயிருப்பதாக கூறியுள்ளார் அன்னா ஹசாரே.

அன்னா

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது ஆம் ஆத்மி கட்சி அமைச்சர் கபில் மிஸ்ரா இன்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், கட்சியின் முக்கிய தலைவரிடமிருந்து இரண்டு கோடி ரூபாய் வாங்கியதை நேரடியாகவே பார்த்தேன்’ என அவர் கூறினார். இதையடுத்து, டெல்லி அரசியல் சூழ்நிலை பரபரப்பானது. இதனிடையே, கெஜ்ரிவால் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டால் மனமுடைந்து போயிருப்பதாக அன்னா ஹாசாரே கூறியுள்ளார்.

இது குறித்து அன்னா ஹாசாரே கூறுகையில், 'இன்று தொலைக்காட்சிகளில் பார்த்த காட்சிகளால் நான் மனமுடைந்து போயுள்ளேன். என்னுடன் சேர்ந்து ஊழல், லஞ்சம் ஆகியவற்றுக்கு எதிராக போராடியதால் தான் அவர் டெல்லி முதல்வரானார். ஆனால், இன்று அவரே ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருப்பது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது' எனக் கூறியுள்ளார். இதனிடையே, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கெஜ்ரிவால் மீது விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.