Published:Updated:

மோகன் பகவத் ஜனாதிபதியானால் காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு- சொல்கிறார் சிவசேனா எம்.பி

சண்முகபாண்டியன்.தே
மோகன் பகவத் ஜனாதிபதியானால் காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு- சொல்கிறார் சிவசேனா எம்.பி
மோகன் பகவத் ஜனாதிபதியானால் காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு- சொல்கிறார் சிவசேனா எம்.பி

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ஜனாதிபதியானால் காஷ்மீர் பிரச்னையில் தீர்வு காணப்படும் என சிவசேனா எம்.பி கருத்து தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் நிறைவடைகிறது. அதற்குள் அடுத்த ஜனாதிபதி யார் என்ற விவாதங்கள் கிளம்பிவிட்டன. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ஜனாதிபதியாக வர வேண்டும் என சிவசேனா தரப்பும், மதச்சார்பற்ற ஒருவர்தான் வர வேண்டும் என எதிர்க்கட்சிகள் தரப்பும் பேசிவருகின்றனர்.

இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை ஆதரித்து சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவுட் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறிகையில், 'நீண்டகாலமாக இருந்துவரும் காஷ்மீர் பிரச்னையைத் தீர்க்க வலிமையான ஒரு தலைவர் வேண்டும். அதற்கு மோகன் பகவத்தான் சரியாக இருக்கும். அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும்' எனக் கூறியுள்ளார். இதனிடையே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் மோகன் பகவத்தை ஆதரித்துக் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.