Published:Updated:

அசுத்தமான யமுனை நதி: அதிகாரிகளைக் கேள்விகளால் துளைத்த யோகி ஆதித்யநாத்!

ராகினி ஆத்ம வெண்டி மு.
அசுத்தமான யமுனை நதி: அதிகாரிகளைக் கேள்விகளால் துளைத்த யோகி ஆதித்யநாத்!
அசுத்தமான யமுனை நதி: அதிகாரிகளைக் கேள்விகளால் துளைத்த யோகி ஆதித்யநாத்!

சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் மிகவும் பாதிப்படைந்துள்ள யமுனை நதியின் நிலையினை நேரில் பார்த்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அதுகுறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.


உத்தரப்பிரதேசத்தில் தாஜ்மஹாலுக்கும் ஆக்ரா கோட்டைக்கும் இடையில் ஓடும் நதியான யமுனை, கழிவு நிறைந்து சுற்றுச்சூழல் சீர்கேடுகள் மிகுந்து காணப்படுகிறது. இந்நிலை குறித்து உத்தரப்பிரதேச அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார் உ.பி. முதல்வர்.

உத்தரப்பிரதேச அரசு சார்பில் இந்தியத் தொல்லியல் துறையுடன் இணைந்து தாஜ்மஹாலின் யமுனை நதியோரம் 80 ஏக்கர் பரப்பளவில் பூங்கா கட்டமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், அந்தப் பகுதி தற்போது கழிவுகள் கொட்டும் இடமாகக் காட்சியளிக்கிறது. இதனை விரைவில் சீர் செய்யுமாறு ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.