Published:Updated:

சேமிப்புப்பணம் ஒரு கோடியை ராணுவத்துக்குக் கொடுத்தார்! பாராட்டு மழையில் தம்பதி

ராகினி ஆத்ம வெண்டி மு.
சேமிப்புப்பணம் ஒரு கோடியை ராணுவத்துக்குக் கொடுத்தார்! பாராட்டு மழையில் தம்பதி
சேமிப்புப்பணம் ஒரு கோடியை ராணுவத்துக்குக் கொடுத்தார்! பாராட்டு மழையில் தம்பதி

வங்கி அதிகாரி ஒருவர் தன் வாழ்நாள் சேமிப்பான ஒரு கோடி ரூபாயை ராணுவத்துக்கும், ராணுவ வீரர்களுக்கும் உதவும் எண்ணத்தில் அளித்துள்ளார்.


குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி ஜனார்த்தனன்பாய். தன்னுடைய பணிக்காலத்தில் வருங்கால வைப்பு நிதியில் சேமித்து வைத்துள்ளார். அந்த சேமிப்புத் தொகையின் மதிப்பு ஒரு கோடி ரூபாய். தன் வாழ்நாள் முழுவதும் ஓய்வுக்காலத்துக்குத் தேவைபடுமென கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த அந்தப் பணத்தை தற்போது ராணுவத்திற்கு பெருந்தன்மையுடன் வழங்கியுள்ளார்.

ஜனார்த்தனன் பாய், எஸ்பிஐ வங்கியில் கிளார்க்காகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 85 வயதுடைய ஜனார்த்தனன் தன் மனைவியுடன் சேர்ந்து தன் ஒட்டுமொத்த வாழ்நாள் சேமிப்பையே ராணுவத்துக்காக நன்கொடையாக வழங்கியுள்ளார். ''எல்லையில் நாட்டுக்காக பெரும் தியாகங்களைச் செய்து உயிரையும் பணயம் வைத்துப் போராடி வரும் ராணுவ வீரர்களின் இன்னல்களைப் போக்க தம்மால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டுமென்ற எண்ணத்தால் இப்பண உதவியினை அளித்துள்ளேன்" என்று ஜனார்த்தனன் கூறுகிறார்.
இந்த உயர்ந்த எண்ணங்கொண்ட தம்பதியினரை பலரும் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.