காங்கிரஸுடன் தான் கூட்டணி! அகிலேஷ் திட்டவட்டம்

2019 நாடாளுமன்றத் தேர்தலை காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்து சமாஜ்வாடி எதிர்கொள்ளும் எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளார் அகிலேஷ் யாதவ்.

அகிலேஷ்

அண்மையில் நடைபெற்ற உத்தரப்பிரதேச தேர்தலில் சமாஜ்வாடி கட்சி காங்கிரஸுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில்  பாஜக வெற்றிப்பெற்று ஆட்சியைப் பிடித்தது. சமாஜ்வாடி கட்சி வெறும் 47 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. உபியில் பலமாக இருந்த சமாஜ்வாடி கட்சியின் தோல்விக்கு அகிலேஷின் தவறான தேர்தல் வியூகங்களும் காங்கிரஸுடன் கூட்டணி வைத்ததும்தான் காரணம் என அகிலேஷின் தந்தை முலாயம் சிங் யாதவ் விமர்சித்தார்.

இந்நிலையில், 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் காங்கிரஸுடனான கூட்டணி தொடரும் என அறிவித்துள்ளார் அகிலேஷ் யாதவ். தேர்தல் தோல்விக்குப் பின்னர் முதல் முறையாக தனது அடுத்தக்கட்ட அரசியல் திட்டம் பற்றி அவர் மனம் திறந்துள்ளார்.  2019 தேர்தலிலும் அகிலேஷ் யாதவ் - ராகுல் காந்தி இணைந்து தேர்தல் பணிகளில் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!