மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சிக்கும் தமிழிசை!

தி.மு.க.வுக்கு அரசியல் நாகரிகம் தெரியவில்லை என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறியுள்ளார்.

தமிழிசை

தி.மு.க தலைவர் கருணாநிதியின் வைர விழா மிகப்பெரிய அளவில் நடைபெறவுள்ளது. இதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன், லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார் உள்ளிட்ட இந்தியாவின் முக்கியத் தலைவர்கள் பலர் கலந்துக்கொள்ளவுள்ளனர். இதனிடையே வைர விழாவுக்கு மதவாதக் கட்சியான பாஜகவை அழைக்கப் போவதில்லை என திமுகவின் ஆர்.எஸ்.பாரதி கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை, தி.மு.க.வுக்கு அரசியல் நாகரிகம் தெரியவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து அமைச்சர் பதவியை அனுபவித்தப்போது பாஜக மதவாதக் கட்சியென தெரியவில்லையா என அவர் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், 'ஸ்டாலின் கலைஞரை வைத்து குறுகிய அரசியல் செய்வதாகவும்' அவர் குற்றம்சாட்டியுள்ளார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!