வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (12/05/2017)

கடைசி தொடர்பு:22:22 (12/05/2017)

"தமிழக முதல்வரிடம் ஒரே ஒரு கேள்வி"- சேலத்தில் சீறிய செம்மலை

'அம்மா முதல்வராக்கிய ஓ.பி.எஸ் முதல்வராக நீடிக்க வேண்டுமா... இல்லை சசிகலா முதல்வராக்கியவர் முதல்வராக தொடர வேண்டுமா' என ஓ.பி.எஸ் அணியின் செம்மலை சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து கேள்வி எழுப்பியுள்ளார்.

செம்மலை

அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா அணியின் சார்பில் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் இன்று சேலத்தில் நடைபெற்றது. ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் செம்மலை, பொன்னையன், கே.பி.முனுசாமி உள்ளிடோர் கலந்து கொண்டனர். ஓ.பி.எஸ் அணிக்கு ஆதரவாக பெருந்திரளான கூட்டம் பங்கேற்றது. இந்நிகழ்வில் பேசிய செம்மலை, 'அம்மா முதல்வராக்கிய ஓ.பி.எஸ் முதலவராக வேண்டுமா, இல்லை சசிகலா முதல்வராக்கியவர் தொடர வேண்டுமா' என எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.  

மேலும் '122 எம்.எல்.ஏ., 48 மாவட்டச் செயலாளர்கள் அங்கு இருக்கலாம். ஆனால், அது பினாமி ஆட்சி. அங்கு வெளிப்படை தன்மை இல்லை. சசிகலாவை ஒதுக்கியதாக சொல்கிறார்கள். ஆனால், ஜெயா டிவியில் அவரது ஆசி பெற்றதாக செய்தி வருகிறது. இதற்கிடையில், ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் என கூறப்படுகிறது. ஸ்டாலினுக்கு முதல்வராகும் வாய்ப்பே கிடையாது. அந்த வாய்ப்பு ஓ.பி.எஸ்ஸுக்கு தான் உள்ளது. தர்ம யுத்தத்தில் நியாயம் வெல்லும்' என கூறியுள்ளார்.