"இருப்பதை இழந்து தான் ஓ.பி.எஸ் பக்கம் வந்தேன்!" - சொல்பவர் யார் தெரியுமா?!

அமைச்சர் பதவி உள்ளிட்டவற்றை இழந்து தான் ஓ.பி.எஸ் அணிக்கு வந்தேன் எனக் கூறியுள்ளார் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.

மாஃபா

அ.தி.மு.கவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்தார் மாஃபா பாண்டியராஜன். ஓ.பி.எஸ் அ.தி.மு.கவில் இருந்து பிரிந்து வந்த பின்பு, அவரது அணிக்கு பாண்டியராஜன் வந்தார். இதையடுத்து செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரானார். இதனிடையே, 'இருப்பதை இழந்து தான் ஓ.பி.எஸ் பக்கம் வந்தேன்', என பாண்டியராஜன் கூறியுள்ளார்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'பிளஸ் 2 தேர்வில் ரேங்க் முறை ரத்து செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது. தற்போதைய பள்ளிக்கல்வித்துறை சிறப்பாக செயல்படுகிறது' எனக் கூறியுள்ளார். மேலும், நீட் தேர்வில் மாணவர்கள் நடத்தப்பட்ட விதம் கண்டிக்கத்தக்கது என அவர் கூறியுள்ளார். அ.தி.மு.கவின் இரு அணிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது' எனவும் மாஃபா பாண்டியராஜன் வலியுறுத்தியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!