Published:Updated:

பள்ளி மாணவர்களுக்கு ஏன் காக்கி நிற சீருடை?.. கடிந்து கொண்ட யோகி ஆதித்யநாத்!

அஸ்வினி.சி
பள்ளி மாணவர்களுக்கு ஏன் காக்கி நிற சீருடை?.. கடிந்து கொண்ட யோகி ஆதித்யநாத்!
பள்ளி மாணவர்களுக்கு ஏன் காக்கி நிற சீருடை?.. கடிந்து கொண்ட யோகி ஆதித்யநாத்!

உத்தரப்பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு, ஒவ்வொரு சனிக்கிழமையும், பாடப் புத்தகங்கள் இல்லாத வேலை நாளாக (no school bag day) அறிவிக்க, அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பு பள்ளி மாணவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளதாம். 


 

உ.பி துணை முதல்வர் தினேஷ் ஷர்மா தலைமையில் நேற்று  நடைபெற்ற கூட்டத்தில் பள்ளி மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் மன அழுத்தம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது வாரத்தில் ஒரு நாள் பாடப்புத்தகங்கள் இல்லாமல், மாணவர்களின் படைப்பாற்றலை அதிகரிக்கும் செயல்பாடுகளில் அவர்களை ஈடுபடுத்த முடிவெடுக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு சனிக்கிழமையும் புத்தகங்கள் இல்லாத் தினமாக அறிவிக்கப்பட உள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிட உள்ளனர். சனிக்கிழமைகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் புத்தகங்கள் சுமந்து வரத்தேவையில்லை. இந்த திட்டத்தின் மூலம், சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடனான புரிந்துணர்வு அதிகரிக்கும் என்று துணை முதல்வர் தெரிவித்துள்ளார். 

யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, உ.பியில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. 2012-ம் ஆண்டு சமாஜ்வாதி அரசு, பள்ளி மாணவர்களுக்கு காக்கி நிற சீருடையை அறிமுகப்படுத்தியது. அரசுப் பள்ளி மாணவர்கள் காக்கி நிற சீருடை அணிவது முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு  பிடிக்கவில்லை என்பதால், வரும் ஜூலை மாதம் முதல் பின்ங், வெள்ளை கலந்த சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு ஏன் காவலர்கள் போன்று காக்கி ஆடை என்று அதிகாரிகளை கடிந்து கொண்டாராம் யோகி. மேலும் உ.பியில் உள்ள அனைத்து ஏழைக் குழந்தைகளுக்கு இலவச பாடப் புத்தகங்கள், சீருடை, ஸ்கூல் பேக் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன.