வெளியிடப்பட்ட நேரம்: 04:41 (16/05/2017)

கடைசி தொடர்பு:07:53 (16/05/2017)

'அரசியலுக்கு வருவதும் வராததும் ரஜினியின் சொந்த விருப்பம்' - மு.க.ஸ்டாலின்

நடிகர் ரஜினிகாந்த், சென்னையில் நேற்று தனது ரசிகர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், 'ஒருவேளை நான் அரசியலுக்கு வந்தால் பணம் சேர்க்க நினைப்பவர்களைப் பக்கத்தில் சேர்க்க மாட்டேன்' என்று தெரிவித்தார். ரஜினிகாந்தின் இந்தப் பேச்சு, அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள் அவரது பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் என இருவேறு கருத்துகளைத் தெரிவித்தனர்.

ஸ்டாலின்

பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் ரஜினிகாந்த்தின் கருத்தை வரவேற்றனர். பா.ம.க இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்தார். இந்த நிலையில், நேற்று கொளத்தூர் தொகுதியில் ஆய்வுப் பணியை மேற்கொண்ட தி.மு.க. செயல் தலைவரும்  சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினிடம், ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசம்குறித்து நிருபர்கள் கருத்துக் கேட்டனர்.

இதற்குப் பதில் அளித்த மு.க.ஸ்டாலின், 'சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் விரும்புகிறார்கள். அவர் அரசியலுக்கு வருவதும் வராமல் இருப்பதும் அவரது சொந்த விருப்பம். தனிப்பட்ட முறையில் நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அவர் அரசியலுக்கு வந்தால் அதை நாங்களும் வரவேற்போம்' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க