Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினி இந்தக்கட்சிக்குத்தான் ஆதரவு - குறியீடு சொல்லுது பாஸ்!

ரஜினி, ரசிகர்களைச் சந்திச்சாலும் சந்திச்சாரு. ஆளாளுக்கு குறியீடுகள் கண்டுபிடிச்சு அவரு இந்தக்கட்சிக்குத்தான் சப்போர்ட் பண்ணுவாரு அந்தக்கட்சிக்குத்தான் சப்போர்ட் பண்ணுவாருன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. அந்த வரிசையில இன்னும் என்னன்னலாம் சொல்வாங்கனு பார்க்கலாமா மக்களே...

ரஜினி

* ரசிகர்மன்ற சந்திப்பு நிகழ்ச்சியில பின்னாடி இருக்குற வெள்ளைத்தாமரையைப் பார்த்துட்டு ரஜினி பா.ஜ.கவுக்கு ஆதரவுன்னு சொல்லாம சொல்றாருன்னு கிளம்புவாங்க. ஏற்கெனவே இவருக்கும் பிரதமர் மோடிக்கும் சந்திப்புகள் நடந்திருக்கிறதால அதுல சேருறதுக்கான அதிக வாய்ப்புகள் இருக்குன்னு ஆக்டோபஸையே மிஞ்சுற அளவுக்கு ஆரூடம் சொல்லி தாமரை மலரும் தாமரை மலரும்னு கிளம்புனாலும் கிளம்புவாங்க.

* மீட்டிங்குல இருக்கிற தாமரையா இப்ப முக்கியம். மீட்டிங்குல என்ன பேசுனாரு. மதுப்பழக்கம், புகைப்பழக்கத்தைலாம் விட்டுடுங்கனுதான் ரசிகர்கள்கிட்ட சொல்லிட்டு இருந்தாரு. தமிழ்நாட்டுலேயே அவை ரெண்டுக்கு எதிராகவும் ரொம்பநாளா போராடிக்கிட்டு இருக்குற கட்சி  பா.ம.க. இதுல இருந்தாவது புரியுதா. அதனால  ரஜினி பா.ம.கவுக்கு தான் சப்போர்ட் பண்ணுவாருன்னு கூட சொன்னாலும் சொல்லி, தாமரைதான் மலரும்னு இல்ல மாம்பழம்கூட இனிக்கும்னு சொன்னாலும் சொல்வாங்க.

* இவங்க ரெண்டு பேர் மட்டும்தான் ரஜினியை சொந்தம் கொண்டாடணுமா என்ன? அவ்வளவு நாளுக்கு அப்புறம் பரபரப்பான அரசியல் சூழலில் ரசிகர்களைச் சந்திக்கிற ரஜினி அவ்வளவு கலர் இருந்தும் கரெக்டா ஏன் கறுப்புக்கலர் சட்டையை போட்டுட்டுக்கிட்டு வரணும். இதெல்லாம் திராவிடக்கழகத்துக்கு ஆதரவு தெரிவிக்கபோறதுமாதிரிதான் இருக்குன்னுலாம் கூட சிலபேர் கிளம்பினாலும் கிளம்புவாங்க யாருக்குத்தெரியும்.

* கருப்புச்சட்டையினா  உடனே திராவிட கழகத்துக்குதான் சொந்தமா. 'என் இனமக்களே... அது அடங்காத் தமிழனின் அடையாள  நிறம். அண்ணன் சீமானின் ஆக்ரோசத்தின் நிறம். ஆகவே 'சிறப்பு நட்சத்திரம்' (சூப்பர் ஸ்டாருக்கு தமிழ்ல அதுதானாம்!) அவர்கள் எங்கள் கட்சிக்குதான் ஆதரவு தெரிவிப்பார்னு நாம் தமிழர் கட்சியினர் உள்ளே புகுந்து கபடி ஆடினாலும் ஆடலாம்.

* அப்புறம் மீட்டிங்ல ரஜினி சொன்ன இன்னொரு விஷயம். 'நான் அரசியலுக்கு வர்றது எல்லாம் ஆண்டவன் கையிலதான் இருக்கு'ங்கிறது. சோசியல் மீடியாவுல ஆண்டவர்னா அது கமல்ஹாசன்தான். அவர் வேற அடிக்கடி அரசியல் பத்தி கருத்துகளை ட்விட்டர்ல போட்டு யாரையாச்சும் அதுல கோத்து, கதறவிட்டுக்கிட்டு வேற இருக்குறார். இதைலாம் பார்க்கும்போது கமலும் ரஜினியும் சேர்ந்துகூட அரசியலுக்கு வர வாய்ப்பு இருக்குதுன்னுலாம் கூட பழைய 'நினைத்தாலே இனிக்கும்' கால க்ரூப்கள் கிளம்பவும் வாய்ப்புகள் இருக்கிறது.

*சினிமாவுல வேணா கமலை ஆண்டவர்னு கூப்பிடலாம். ஆனா ஈ.பி.எஸ்ஸுக்கு முன்னாடி நிஜமான ஆண்டவர்னா அது எங்க தலைவர் ஓ.பி.எஸ் தானே . அதனால தலைவர், ஓ.பி.எஸ்ஸுடன் இணைஞ்சு பணியாற்றுவோம்கிறதைக்கூட அந்தமாதிரி குறியீடா சொல்லிருக்கலாம்னு கூட ஓ.பி.எஸ் க்ரூப் சொன்னாலும் சொல்வாங்க. யாருக்குத்தெரியும்.

*அட அவ்வளவு ஏன் பாஸ், எதைக்கேட்டாலும் 'அதைத்தாங்கள்தான் கூறவேண்டும்'னு ஒரே பதிலை சொல்றவங்க தலைவி தீபா. எப்பக்கேட்டாலும் 'எல்லாம் ஆண்டவன் கையில இருக்கு'ன்னு சொல்றவர் ரஜினிகாந்த். கூட்டிக்கழிச்சுப்பாருங்க ரெண்டுபேருமே ஒரேமாதிரி பேசுறாங்க. அதனால ரஜினி எங்க கட்சிக்குதான் சப்போர்ட் பண்ணுவாருன்னுகூட கிளம்பினாலும் கிளம்புவாங்க. ஆங்....

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close