யாரோ ஒருவரின் ஒரு நொடி கவனக்குறைவு எத்தனையோ குடும்பங்களின் நிம்மதியை கூறுபோட்டுவிடுகிறது. விபத்துகளில் சிக்கி மரணத்துடன் போராடும் நேரத்தில் காப்பாற்றவும், கைகொடுக்கவும் கடவுள் நேரில் வருவதில்லை. கடவுளாக சில மனிதர்கள்தான் வருவார்கள். அப்படி வந்தவர்தான் இந்த பிரஷாந்த் பாண்டே!

கடந்த 13-ம் தேதி இரவு பெங்களூரில் இருந்து மும்பைக்குப் புறப்பட்டது நேஷனல் டிராவல்ஸ் வால்வோ ஏ.சி. பஸ். 51 பேர் அந்த பஸ்ஸில் பயணம் செய்தார்கள். கர்நாடக மாநில ஹாவேரி மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சீறிப் பாய்ந்துகொண்டிருந்தபோது மணி அதிகாலை 2.45 மணி. டிரைவர் லேசாகத் தூக்கத்தில் தடுமாற நெடுஞ்சாலையில் உள்ள டிவைடர் மீது பஸ் உரசியது. அந்த உரசலில் டீசல் டேங்க் வெடிக்க... தீப்பற்றிக்கொண்டது. மளமளவென தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

பேருந்துக்குள் இருந்த பயணிகள் இந்த விபரீதம் ஏதும் தெரியாமல் உள்ளே ஆழ்ந்த தூக்கத்தில்

இருந்தனர். அந்த நேரத்தில் கண் விழித்த பிரஷாந்த் பாண்டே என்ற இளைஞர் கூச்சல் போட்டு பயணிகளை எழுப்பியிருக்கிறார். பஸ்ஸின் மேல்கூரையில் காற்றுக்காக வைக்கப்பட்டிருக்கும் ஓப்பனரைத் திறந்து அதன் வழியாக பயணிகளைக் காப்பாற்றியிருக்கிறார். எட்டு பேர் இறந்துபோனார்கள். மற்றவர்கள் தப்பினார்கள். உயிர் தப்பிய அத்தனை பயணிகளும் பிரஷாந்த் பாண்டேவை கடவுளாகவே பார்த்தார்கள்.

பிரஷாந்த் பாண்டேவிடம் பேசினோம். ''எனக்கு சொந்த ஊரு புனே. எங்க அக்காவை பெங்களூரு ஒயிட் ஃபீல்டு ஏரியாவில் திருமணம் செய்து கொடுத்திருக்கிறோம். நான் பி.சி.ஏ. படித்துவிட்டு ஐ.டி. நிறுவனத்தில் வேலைசெய்கிறேன். விடுமுறைக்காக அக்கா வீட்டுக்கு வந்திருந்தேன். திரும்பவும் எங்கள் ஊரான புனேவுக்குச் செல்ல இந்தப் பேருந்தில் புறப்பட்டேன்.

என்னுடைய ஸீட் நெம்பர் இரண்டு. பகலில் நன்றாகத் தூங்கிவிட்டதால் தூக்கம் வரவில்லை என்று செல்போனில் பாட்டு கேட்டுக்கொண்டு இருந்தேன். அப்படியே அசந்து தூங்கிவிட்டேன். திடீரென முழிப்பு வந்தது. பார்த்தால் பஸ் முழுவதும் தீ. என்ன செய்வது என்று எனக்குப் புரியவில்லை. தூங்கிக்கொண்டிருந்த மற்றவர்களை கூச்சல் போட்டு எழுப்பினேன். எல்லா கதவுகளும் மூடப்பட்டு இருந்தன. தலைக்கு மேல ஏர் விண்டோ இருந்தது. அதை கையால் அடித்தேன். திறக்கவில்லை. கம்பியைப் பிடித்துக்கொண்டு காலால் உதைத்தேன். திறந்துடுச்சு. அது வழியாக நான் பஸ்ஸின் டாப்பில் ஏறினேன். அங்கிருந்து கீழே இறங்க நினைத்தபோதுதான் பஸ்ஸுக்குள் கத்தும் சக பயணிகளைப் பார்த்தேன்.

கீழே இறங்கி நான் மட்டும் தப்பிக்க மனசு வரவில்லை. அந்த ஏர் விண்டோ வழியாக ஒவ்வொருவராக கைப்பிடித்து தூக்கிவிட்டேன். இப்படி 20 பேரை மீட்டு வெளியில் இழுத்தேன். சிலர் அவர்களாகவே முயற்சித்து கண்ணாடியை உடைத்து வெளியில் வந்தனர். அப்படியும் எட்டு பேரை என்னால் காப்பாற்ற முடியவில்லை. அவர்களையும் காப்பாற்றி இருந்தால் மனசுக்கு திருப்தியாக இருந்திருக்கும்'' என்று கலங்கினார். அந்த இளைஞரின் செயல்பாட்டுக்கு பாராட்டு தெரிவித்தோம்.

பணம் அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை... பாதுகாப்பாகவும் சொகுசாகவும் செல்ல வேண்டும் என்பதால்தான் மக்கள் இதுபோன்ற பேருந்துகளில் செல்கிறார்கள். அவர்களைப் பத்திரமாக கொண்டுபோய் சேர்க்க வேண்டாமா? காசு கொடுத்து உங்கள் பேருந்தில் பயணம் செய்யும் எல்லோருக்குமே குடும்பம் இருக்கிறது. அவர்களை எதிர்பார்த்து அம்மாவோ, மனைவியோ, குழந்தையோ காத்திருக்கலாம். அவர்கள் கனவுகளை பொசுக்கி விடாதீர்கள்... ப்ளீஸ்..!

- வீ.கே.ரமேஷ்