ஆர்ப்பாட்டமில்லாமல் நடந்த பிறந்தநாள் விழா! அரசியலுக்கு அடித்தளம்போடுகிறாரா ஜெயானந்த்?

திவாகரனின் மகன் ஜெயானந்தின் பிறந்தநாள் விழா நேற்று மன்னார்குடியில் ஆர்ப்பாட்டமில்லாமல் நடைபெற்றது. இது, அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜெயா

மன்னார்குடி குடும்பத்தின் திருமண நிகழ்ச்சிகள் தொடங்கி, எந்த நிகழ்ச்சி நடந்தாலும் ஊரே பரபரக்கும். அ.தி.மு.க நிர்வாகிகள் ஆடம்பரத்தால் அதிரவைப்பார்கள். ஆனால் நேற்று, திவாகரனின் மகன் ஜெயானந்தின் பிறந்தநாள் விழா, எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் நடந்து முடிந்துள்ளது. எங்கு இருந்தாலும் பிறந்தநாளை மன்னார்குடியில் கொண்டாடுவதுதான் ஜெயானந்தின் வழக்கம். இந்த ஆண்டு, பிறந்தநாளை வெகுவிமரிசையாகக் கொண்டாட வேண்டுமென ஜெயானந்தின் நண்பர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், ஜெயானந்த் அதற்குத் தடை போட்டுவிட்டார்.

ஜெயா

 அதையும் மீறி, ஜெயானந்த் மீதான பாசத்தில் அவர்களுடைய நண்பர்கள் மன்னார்குடியில், 'மன்னையின் இளவரசனே, ஏழையின் விடிவெள்ளியே, எழுச்சி நாயகனே' என்று பிளக்ஸ்களை வைத்து அசத்தியிருக்கிறார்கள். பிரமாண்ட நிகழ்ச்சி தவிர்ப்புக்கான காரணம் குறித்து சிலர் பேசுகையில், 'ஒவ்வொரு வருட பிறந்தநாளுக்கும் அத்தை சசிகலாவிடமிருந்து நேரடியாகவோ, போன் மூலமாகவோ வாழ்த்து வந்துவிடும். அதனால், இந்த ஆண்டு சசிகலா சிறையில் இருக்கும்போது, பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடினால் நன்றாக இருக்காது என நினைத்துள்ளார் ஜெயானந்த். தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையில், பிறந்தநாளை மிகப் பிரமாண்டமாகக் கொண்டாடினால், அது நமக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று நினைத்திருக்கிறார் அவர். 

ஜெயா

'இனிமேல், நம் குடும்பத்தில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அது எளிமையாகவே இருக்கட்டும்' என்று திவாகரன் சொன்னதாகச் சொல்லியிருக்கிறார், ஜெயானந்த். திவாகரன் எந்த நிகழ்ச்சிக்குச் சென்றாலும் தனது மகன் ஜெயானந்தைக் கூடவே அழைத்துச்சென்று, கட்சிப் பொறுப்புக்குக் கொண்டுவர வேண்டுமென நினைத்தார். தமிழக கவர்னரைச் சந்திக்கும்போதுகூட தன்னுடன் அழைத்துச்சென்றார் திவாகரன். இதனிடையே, மன்னார்குடி தொகுதியை ஒருமுறைகூட அ.தி.மு.க கைப்பற்றியதில்லை, அந்தக் கனவை நிறைவேற்ற வேண்டுமென்றால், மன்னார்குடி தொகுதியில் ஜெயானந்தை களமிறக்கி வெற்றிபெறலாம்' என்கிறார்கள் சில ரத்தத்தின் ரத்தங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!