ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர்! - சோனியா, மம்தா ஆலோசனை | Sonia Gandhi consulting with Mamata about general candidate in president election

வெளியிடப்பட்ட நேரம்: 05:58 (17/05/2017)

கடைசி தொடர்பு:10:36 (17/05/2017)

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர்! - சோனியா, மம்தா ஆலோசனை

ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சிகள் கூட்டாகச் சேர்ந்து பொது வேட்பாளரை நிறுத்துவதுகுறித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்க முதல்வரும்  திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

சோனியா காந்தி - மம்தா பானர்ஜி


ஜனாதிபதி தேர்தல், வரும் ஜூலையில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், அதிக பலத்தோடு இருக்கும் பா.ஜ.க-வுக்கு கடும் போட்டியை அளிக்கும் வகையில், பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சியில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா, பல்வேறு கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று, மம்தா பானர்ஜியுடன் சோனியா ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்புக்குப் பின், மம்தா பானர்ஜி, 'ஜனாதிபதி தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் விரும்பினால் கருத்து வேறுபாடுகளைப் புறந்தள்ளி, அணி சேரத் தயாராக இருக்கிறோம்'  எனத் தெரிவித்தார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க