ஸ்டாலின், சீமான், அன்புமணி, திருமாவுக்குப் புகழாரம்... 'போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்!'- ரஜினி சூசகம்

இன்று சென்னையில் ரசிகர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் 'போர் வரும்போது நாம் பார்த்துக்கொள்ளலாம். அதுவரை பொறுமையாக இருங்கள்' எனக் கூறியுள்ளார்.

rajini

சென்னை கோடம்பாக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தன் ரசிகர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. பல்வேறு ஊர்களிலிருந்து வரும் ரசிகர்களை அவர் சந்தித்து புகைப்படம் எடுத்துவந்தார். இதனிடையே ரசிகர்களுடனான  சந்திப்பின் போது அவர் பேசியது பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியது. குறிப்பாக தன் ரசிகர்களிடம் 'பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் அரசியலுக்கு வரக்கூடாது' என அவர் கோரிக்கை வைத்தார்.

இதனிடையே இன்று கடைசி நாளாக ரசிகர்களைச் சந்தித்த ரஜினி, 'வேறு மாநிலத்திலிருந்து வந்த என்னை தமிழனாக மாற்றியது நீங்கள்தான்' எனக் கூறினார். மேலும் அரசியல் குறித்து நான் அண்மையில் பேசியது பெரும் விவாதங்களையும் எதிர்ப்புகளையும் கிளப்பும் என எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் அரசியலில் எதிர்ப்புதான் மூலதனம்' என அவர் கூறியுள்ளார். 'சமூக வலைதளங்களில் என்னைத் திட்டி எழுதுவதைப் பார்க்கும் பொழுது தமிழர்கள் ஏன் இவ்வளவு கீழ்த்தரமாக நடந்துகொள்கிறார்கள்' என வருத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

 

 

 

 மேலும், ஸ்டாலின், சீமான், அன்புமணி, திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களை அவர் பாராட்டினார். குறிப்பாக அவர், 'போர் வரும்போது பார்த்துக்கொள்வோம், அதுவரை பொறுமையாக இருப்போம்' என்று ரஜினிகாந்த் சூசகமாக  ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார். இதனிடையே 'தமிழகத்தில் அரசியல் நிலவரம் சரியில்லை, நிர்வாக அமைப்பு சீர்கெட்டுப் போயுள்ளது' என ரஜினி கூறியது குறிப்பிடத்தக்கது. தமிழகத்திலிருந்து என்னைத் தூக்கிப்போட்டாலும் நான் வேறு மாநிலத்துக்குச் செல்லமாட்டேன். இமயமலைக்குத்தான் செல்வேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!