ரஜினிகாந்த் உருவபொம்மை எரிப்பு! சென்னையில் போக்குவரத்து பாதிப்பு

நடிகர் ரஜினிகாந்த்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழர் முன்னேற்றப்படை அமைப்பினர், சென்னை கதீட்ரல் சாலையில் அவரது உருவபொம்மையை எரித்தனர். இதனால், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

rajni

சில நாள்களுக்கு முன், தனது ரசிகர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், தனது அரசியல் பிரவேசம்குறித்து சூசகமாகப் பேசினார். ஸ்டாலின், சீமான் உள்ளிட்ட தலைவர்களைப் புகழ்ந்ததோடு, 'போர் வரும்போது பார்த்துக்கொள்வோம், தயாராக இருங்கள்' எனவும் ரசிகர்களை அவர் கேட்டுக்கொண்டார். ரஜினியின் பேச்சுக்கு, பல தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. ரஜினி, அரசியலுக்கு வர வேண்டுமா வேண்டாமா என்றும் விவாதங்கள் கிளம்பின.

ரஜினி

இந்த நிலையில், ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை கதீட்ரல் சாலையில் தமிழர் முன்னேற்றப்படை அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அந்த அமைப்பின் தலைவர் வீரலட்சுமியின் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என முழக்கங்கள் எழுப்பப்பட்டு, அவரது உருவபொம்மையும் எரிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர். முக்கிய சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால், கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் ரஜினிகாந்த்தின் வீட்டை நோக்கிச் செல்ல முயன்றதால், அவரது இல்லத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!