ரஜினியின் கொள்கை என்ன..? நல்லகண்ணு கேள்வி | What is Rajni's ideology, questions Nallakannu

வெளியிடப்பட்ட நேரம்: 18:47 (22/05/2017)

கடைசி தொடர்பு:18:46 (22/05/2017)

ரஜினியின் கொள்கை என்ன..? நல்லகண்ணு கேள்வி

காவிரி பிரச்னை மற்றும் ஈழப் பிரச்னையில் நடிகர் ரஜினிகாந்த்தின் கொள்கை என்ன என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.ஐ) மூத்த தலைவர் நல்லகண்ணு கேள்வி எழுப்பியுள்ளார்.

நல்லா

அண்மையில் தனது ரசிகர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்துப் பேசினார். குறிப்பாக தனது ரசிகர்களிடம் 'போர் வரும்போது பார்த்துக்கொள்வோம், தயாராக இருங்கள்' என ரஜினி கூறியது பலத்த விவாதங்களை கிளப்பின. பல்வேறு கட்சித் தலைவர்களும் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து ஆதரவாகவும் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, 'ரஜினிக்கு என்ன கொள்கை உள்ளது' எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் 'காவிரி பிரச்னை மற்றும் ஈழத்தமிழர் பிரச்னையில் ரஜினியின் நிலைப்பாடு என்ன?' எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். தமிழகத்தில் அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளை தடுக்க தனி ஆணையம் அமைக்க வேண்டும் எனவும் நல்லகண்ணு வலியுறுத்தியுள்ளார்.