வைர விழா அழைப்பிதழ்: கருணாநிதியிடம் நேரில் வழங்கிய ஸ்டாலின்

karunanidhi

தி.மு.க தலைவர் கருணாநிதி, தமிழக சட்டமன்றத்துக்குள் எம்எல்ஏ-வாக அடி எடுத்து வைத்து, தற்போது 60 ஆண்டுகள் ஆகியுள்ளன. இதை வைரவிழாவாகக் கொண்டாட முடிவுசெய்து, கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க-வினர் உற்சாகமாக வேலைசெய்து வருகின்றனர். கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி, இந்த வைர விழா நடைபெற இருக்கிறது. சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், சட்டமன்ற வடிவில் அமைக்கப்படும் பிரமாண்ட அரங்கில் விழா நடைபெற இருக்கிறது. ராகுல் காந்தி, லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார், முக்கிய கட்சித் தலைவர்கள், பல மாநில முதல்வர்கள், தங்கள் வருகையை உறுதிசெய்துள்ளனர்.

இந்நிலையில், வைர விழாவில் கருணாநிதி பங்கேற்பாரா என்பதுகுறித்த உறுதித் தகவல் இதுவரை தரப்படவில்லை. 'மருத்துவர்கள் அனுமதித்தால், கருணாநிதி பங்கேற்பார்' என ஸ்டாலின் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியை, மு.க.ஸ்டாலினும் துரைமுருகனும் அவரது கோபாலபுரம் வீட்டில் சந்தித்தனர். வைரவிழாவுக்கான அழைப்பிதழை கருணாநிதியிடம் அளித்துள்ளனர். அதன் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும், ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் இருவரும் கழகப் பொதுச்செயலாளர் அன்பழகனை நேரில் சந்தித்து, வைரவிழா அழைப்பிதழை வழங்கினார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!