பிரதமரைச் சந்தித்தது ஏன்? முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் | Edappadi Palanisamy explains why he met Modi

வெளியிடப்பட்ட நேரம்: 13:39 (24/05/2017)

கடைசி தொடர்பு:14:52 (24/05/2017)

பிரதமரைச் சந்தித்தது ஏன்? முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீரை முறைப்படுத்தும் குழுவை அமைக்க, பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

மோடி

பிரதமர் நரேந்திர மோடியை இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். டெல்லியில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'தமிழகத்துக்குத் தேவையான கோரிக்கைகளை பிரதமரிடம் முன்வைத்துள்ளேன். அரசியல்ரீதியாக எதுவும் பேசவில்லை', எனக் கூறியுள்ளார்.

மேலும், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் கோரியும், நீட்தேர்விலிருந்து அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு விலக்கு தர கோரியும், கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதைத் தடுத்து நிறுத்தவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். குடி மராமத்துப் பணிகளுக்கான ரூ.500 கோடியை மானியமாக வழங்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அதோடு, செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை திறந்து வைக்க பிரதமரிடம் கோரிக்கை வைத்து கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.